தூய்மைத் தொழிலாளர்கள் விவகாரத்தில் தற்போதைய திமுகவின் செயல்பாடுகளை நாடகம் எனக் குறிப்பிட்டு, தவெக அமைச்சர் ராஜ்மோகன் அதனை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இன்று தூய்மை தேவதைகளை நேரில் போய்ப் பார்க்கிற திரு. ஸ்டாலின் அவர்கள் அன்னைக்கு ஏன் பார்க்கவில்லை என்ற காரசாரமான கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். அவர்கள் 10 நாட்கள் ஒருவாய் சாப்பாடு கூட இல்லாமல் உண்ணாவிரதம் இருந்து போராடியபோது, நானும் எனது சகோதரர்கள் அண்ணன் புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் தான் நேரில் போய் அவர்களைப் பார்த்தோம் என்பதை அமைச்சர் ராஜ்மோகன் சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர், அன்று முதலமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு ரிப்பன் மாளிகைக்குப் போக வழி தெரியவில்லையா அல்லது அட்ரஸ் தான் மறந்து போச்சா என மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், கோயில் பிரச்சனையைப் பொறுத்தவரை முத்தமிழறிஞர் கலைஞரின் வசனத்தையே நினைவூட்டி, “நாங்கள் கோயில் கூடாது என்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம்” என திமுகவினரின் கேள்விகளுக்குத் தகுந்த புள்ளிவிவரங்களுடன் விளாசித் தள்ளியுள்ளார்.
