ஜம்மு காஷ்மீரில் உள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணி அளவில் நடந்த ஒரு வாகன விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு எஸ்யூவி கார் வேகமாக வந்த நிலையில் ஒரு வயதான ஸ்கூட்டியில் வந்த முதியவர் மீது மோதியது. அந்த முதியவர் கீழே விழுந்த நிலையில் எழுந்து நின்றார். ஆனால் அங்கிருந்து வேகமாக சென்ற கார் மீண்டும் பின்னோக்கி வந்த அந்த முதியவர் மீது வேண்டும் என்றே மோதியது.

இதில் அந்த முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் கார் ஓட்டுநர் அவருக்கு உதவி செய்வதற்கு பதிலாக அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இது கொலை முயற்சியாக கருதப்படும் நிலையில் தற்போது இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.