பாகிஸ்தான் நாட்டில் உள்ள கசூர் மாவட்டத்தில் ஒரு சிறுமி வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுமியுடன் இளைய சகோதரரும் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அந்த தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் இரு குழந்தைகளும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென பெண் குழந்தையை கட்டாயப்படுத்தி பிடித்து முத்தம் கொடுத்தார். அந்தக் குழந்தை விட்டு விடும்படி கூறியும் அவர் கட்டாயப்படுத்தி வாயில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து எதுவும் நடக்காதது போல் சென்று விட்டார். பயந்து போன பெண் குழந்தை தன்னுடைய சைக்கிள் எடுத்து விட்டு வீட்டிற்கு ஓடியது.
قصور، شاہ عنایت کالونی میں گلی میں کھیلتی کمسن بچی سے درندگی کی کوشش، افسوسناک واقعہ 25 جولائی کو پیش آیا۔ pic.twitter.com/qnp4czsR19
— Neelum Yousaf (@NeelumYousaf23) July 28, 2025
மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பட்டப்பகலில் கூட பெண் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
