தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, தனது பிஞ்சுக் குழந்தையான மகன் வெற்றிக்கொண்டானையும் அவைக்கு அழைத்து வந்திருந்தார். இந்த நிலையில், சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ பல்லவியின் குழந்தையைப் பார்த்த முதலமைச்சர் விஜய், ஓடிவந்து அந்தக் குழந்தையைத் தூக்கி மிகவும் பாசத்துடன் கொஞ்சி மகிழ்ந்தார். முதலமைச்சரின் இந்த அன்பான செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தவெக எம்எல்ஏ பல்லவியின் குழந்தையை கொஞ்சிய முதலமைச்சர் விஜய்#CMVijay #TVK #News18TamilNadu pic.twitter.com/Yu28GCR3Pp
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 22, 2026
முதலமைச்சர் விஜய் அவர்கள் குழந்தை வெற்றிக்கொண்டானைக் கொஞ்சி, விளையாடிய இந்த அழகான மற்றும் நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகிறது. அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையிலும், ஒரு தாயின் குழந்தையிடம் முதலமைச்சர் காட்டிய இந்தத் தூய்மையான பாசம் இணையவாசிகளின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளதுடன், ஒட்டுமொத்த சோசியல் மீடியாவிலும் செம வைரலாகி வருகிறது.
