“என் கண்ணு மாதிரி பார்த்துப் பார்த்து வெட்டி வளர்த்த பச்சைப் புல்வெளியை, அந்த அமேசான் டெலிவரி பெண் கொஞ்சம்கூட இரக்கமே இல்லாம அவளோட சொந்த கார் ஓட்டுற ரோடு மாதிரி நினைச்சு இப்படி  காரை ஏத்தி அடியோடு பாழாக்கிட்டாளே சார்,

அந்த வீடியோவைப் பார்க்குறப்பவே என் ரத்தம் கொதிக்குது !” என்று அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட யூடியூபர் தம்பதியான பிரையன் மாகில் மற்றும் எலிஷா மாகில் ஆகியோர் தங்களது வீட்டு சிசிடிவி காட்சிகளை ஊடகத்திடம் காட்டி ஆக்ரோஷமாகக் கொந்தளித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 21 அன்று அதிகாலை 7.30 மணியளவில் அமேசான் பார்சலை டெலிவரி செய்ய வந்த அந்த விசித்திரப் பெண் ஓட்டுநர், வீட்டிற்குச் செல்ல கான்கிரீட் நடைபாதை தெளிவாக இருந்தபோதிலும், தனது நீல நிற டொயோட்டா காரை நேராகத் தம்பதியரின் நேர்த்தியான புல்வெளியின் மீது  ஓட்டிச் சென்று மூன்று-புள்ளி திருப்பம் மேற்கொண்டு புல்வெளியில் மிக மோசமான டயர் தடங்களை ஏற்படுத்தி நாசம் செய்துள்ளார்;

“>

 

இந்த அசிங்கமான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி அமேசான் நிறுவனத்திற்கு மாபெரும் அவப்பெயரை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உடனடியாகப் பொதுவெளியில் தோன்றிய அமேசான் மக்கள் தொடர்பு மேலாளர் , “அந்த ஓட்டுநரின் செயல் அடியோடு ஏற்றுக்கொள்ள முடியாதது, இதுகுறித்து அந்தத் தேர்ட் பார்ட்டி ஒப்பந்த நிறுவனத்திடம் மிகக் கடுமையான விசாரணை நடத்தப்படும்” என்று அவசர விளக்கமளித்துக்  மன்னிப்புக் கேட்டுள்ளார்.