இத்தாலியில் உள்ள உணவகம் ஒன்றில், இந்தியப் பெண் இன்ஃப்ளூயன்ஸர் குஷி துபே மற்றும் அவரது தோழிகளிடம் அங்கிருந்த ‘ஹொசைன்’ என்ற பணியாளர் மிகுந்த மரியாதையின்றி நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பணத்தைச் செலுத்தும் போது அந்தப் பணியாளர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு, இந்தியாவைத் தரக்குறைவாகவும் விமர்சித்துப் பேசியுள்ளார். இதற்குப் பதிலடியாக, அந்தப் பெண்கள் அவரிடமிருந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துணிச்சலுடன் வாதிட்டனர். இந்தச் சூழலில் காவல் துறையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் போது, அந்தப் பணியாளர் இந்தியாவை இழிவுபடுத்திப் பேசியதற்குப் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக, “இந்தியாவுக்கு எதிராகப் பேசியதற்கு மன்னிப்புக் கேள்” என்று உறுதியாகக் கூறி, அவரிடமிருந்து மன்னிப்பு பெற வைத்தனர்.
View this post on Instagram
“>
இத்தாலியில் அந்நிய நாட்டில் இருக்கும்போதும், இந்தியாவை அவமதித்த நபரைத் தட்டிக் கேட்டு, அவரை மன்னிப்பு கேட்க வைத்த அந்தப் பெண்களின் தைரியத்தைப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
