கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையிலான அதிகாரிகள் செட்டிகுளம், பீச்ரோடு, பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பார்வதிபுரம் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளருக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.