புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பியன்மகாதேவி பட்டினத்தில் வசிக்கும் மீனவர்களான தினேஷ், சிவக்குமார் ஆகிய இருவரும்பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் அதிக விஷத்தன்மை வாய்ந்த வாலடியான் பாம்பு சிக்கியது. இந்நிலையில் அந்த பாம்பு ஆக்ரோஷத்துடனும், கடும் சீற்றத்துடனும் அங்கும் இங்கும் ஓடியதை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்டு சுமார் 8 அடி நீளமுள்ள அந்த பாம்பை அடித்து கொன்றனர். ஒருவேளை பாம்புக்கு கடித்திருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

இது அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளில் ஒன்று. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது, இப்போது கடலில் உயிருக்கு ஆபத்தான உயிரினங்கள் சிக்குவது வாடிக்கையாக இருக்கிறது. வலையில் கடல் சொறி, விஷ பாம்புகள், உருமின் ஆகியவை சிக்குவதால் உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை எதிர்கொண்டு நாங்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறோம் என கூறியுள்ளனர்.