கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெத்தனபள்ளி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரவணன் விவசாய கிணற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சரவணன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.