நீலகிரி மாவட்டத்தில் உள்ள முரம்பிலாவு, கடசன கொல்லி ஆதிவாசி கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் யானைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டு, தேநீர் வழங்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என 60 பேரை வனத்துறையினர் பேருந்தில் பைக்காரா அழைத்துச் சென்று மதிய உணவு வழங்கி பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.