சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்து இருப்பது தேர்தல் வருவதற்கான அறிகுறி என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கொளத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,  பெட்ரோல் – டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார். நேற்று சிலிண்டர் விலை குறைத்து அறிவிப்பு வெளியானது முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.