அதிமுக தொண்டர்கள்மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி,  இந்திய விடுதலை வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்திற்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. ஆகஸ்ட் மாதத்திலே தான் பம்பாயிலே ”வெள்ளையனே வெளியேறு” முழக்கம். இந்தமுழக்கம் பற்ற வைத்த நெருப்பு நாடு எங்கும் பற்றி எரிந்தது. அனைவரும் அந்த ஆகஸ்ட் போர் முழக்கம் எழுப்பினாகள்.

இன்றைக்கு அண்ணன் எடப்பாடியார் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற கொள்ளையர்களுக்கு எதிராக பற்ற வைக்கப் போகிற நெருப்பு, அன்றைக்கு எழுப்பிய முழக்கம் வெள்ளையனே வெளியேறு. இன்றைக்கு இந்த   எழுப்புகின்ற முழக்கம் கொள்ளையனே வெளியேறு கொள்ளையனே வெளியேறு என்ற முழக்கம் தான்.

அண்ணன் எடப்பாடியார் அவர்களை வீழ்த்த வேண்டும் என்று சில குடிலன் கூட்டம் புறப்பட்டு இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் வானில் வட்டமிட்டு பறக்கின்ற வானம்பாடி அண்ணன் எடப்பாடியார். அவரை கூட்டுக்குள் பூட்டி சிறை வைக்க சிலர் முயன்ற போது..  அவர் திமிரி எழுந்தார். சாது மிரண்டால் என்ன ஆகும் என்பது சதிகாரர்களுக்கு அப்போதுதான் புரிந்தது. அதுமட்டுமல்ல தமிழிலே மனோன்மணியம் என்ற ஒரு காப்பியம். சுந்தரம் பிள்ளை எழுதியது.  அதிலே தான் ”குடிலன் பாத்திரம்” சூழ்ச்சி, நரித்தனம், நயவஞ்சகம் என அத்தனை தீமைகளுக்கும் மொத்த வடிவமாய் குடிலனை வடிவமைத்திருப்பார் சுந்தரம் பிள்ளை.

அந்த குடிலன் தலைமையிலே கூட்டம் நடந்து, எம்ஆர் ராதா, எம்.என் நம்பியார்,  பிஎஸ் வீரப்பா அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து புரட்சித் தலைவருடன் போரிட வந்தது போல..  இந்த கோமாளி கூட்டம் வந்தது. இடியோசை கேட்ட எலிகளைப் போல வலைகளிலே பதுங்கி கொண்டார்கள். நீங்கள் எதிரே பல்லாயிரக்கணக்கில் அமர்ந்திருக்கிறீர்கள்… நீங்கள் அண்ணா திமுகவின் தொண்டர்கள் மட்டுமல்ல,  இந்தக் கட்சியின் தூதுவர்களும் நீங்கள் தான்

அன்றைக்கு புரட்சித் தலைவரை கட்சியில் இருந்து நீக்கிய போது திமுக கரை போட்ட வேட்டியோடு… துண்டோடு…  ஒருவன் கூட தெருவில் நடமாட முடியவில்லை. அந்த நிலைமை மீண்டும் வரவேண்டும் ”கொள்ளையனே கோட்டையை விட்டு வெளியேறு” என்பதுதான் முழக்கம். இதான்  பிரகடனம்,  இந்த முழக்கம் ”கொள்ளையனே வெளியேறு” வீடு வீடாக போகட்டும்… ஊர் ஊராக பரவட்டும்… நாடெங்கும் ஒலிக்கட்டும் என தெரிவித்தார்.