அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி எண்கள்: 1800 309 3793(இந்தியா), 8069009901 (அயல்நாடு) புகைப்பட அடையாள அட்டைக்கு https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.