நாட்டின் வணிகத் தலைநகரமான மும்பைக்குச் சுற்றுலா வந்த தெலங்கானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை, இரு நபர்கள் மிரட்டிப் பணம் கேட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் “பணத்தை வாங்கிக்கிட்டு என்னை நல்லா மாட்டி விட்டுட்டானுங்களே” என்று அந்தப் பயணி கதறியபடியே தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கனவுகளின் நகரமாகக் கருதப்படும் மும்பையில், வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது அங்கிருக்கும் பாதுகாப்புச் சூழல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சம்பவத்தன்று, தெலங்கானாவிலிருந்து மும்பைக்குச் சுற்றிப் பார்க்க வந்த அந்தப் பயணியை வழிமறித்த இரண்டு நபர்கள், அவரைத் தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டிப் பணம் பறிக்க முயன்றுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், அவரைச் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டுப் பணத்தையும் இழந்து, தாக்குதலுக்கும் உள்ளானதை உணர்ந்த அந்தப் பயணி, தனது ஆதங்கத்தையும் தனக்கு நேர்ந்த அநீதியையும் வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி, பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களை அள்ளியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உடனடியாக, மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். தாக்குதலில் ஈடுபட்ட அந்த இரு நபர்களையும் கண்டறிந்த காவல்துறையினர், அவர்களை விரைந்து சென்று அதிரடியாகக் கைது செய்து தங்களது காவலில் எடுத்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எச்சரிக்கவும் இந்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
See this Instagram video by @hw_foundation https://t.co/wQNQC8QM3h
“>
