மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி,நீட் நுழைவு தேர்வு பார்த்திங்கன்னா….. திமுக அரசாங்கம் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றார். சிந்தித்துப் பாருங்கள்…! 2010 டிசம்பர் 21 மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டிபிகேஷன் ஊடக நண்பர்களே, பத்திரிகை நண்பர்களே…  இது நாளை உங்கள் செய்தியின் வாயிலாக பத்திரிக்கையில் வர வேண்டும்.

2010ல் மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி,  சுகாதாரத்துறை மக்கள் நல்வாழ்வு அமைச்சர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் குலாம் நபி ஆசாத் தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் எம்பி காந்தி செல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர். அந்த காலகட்டத்தில் தான் இந்த நீட் தேர்வு வந்தது. இது ரெக்கார்ட், இதை மறைக்க முடியாது.இதை மறைத்து இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறார். எவ்வளவு ஏமாற்றி வேலை எண்ணி பாருங்கள்.

இது ரெக்கார்டு,  மாற்ற முடியாது. நீட் தேர்வை கொண்டு வந்தது 2019லே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வைத்த அரசு கொண்டு வந்தது.  காங்கிரஸ் – திமுக இன்றைக்கு அந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உண்ணாவிரதப் போராட்டம்,  மிகப்பெரிய நாடகம். 2021 சட்டமன்ற பொது தேர்தல் அந்த காலகட்டத்தில் திரு.ஸ்டாலின் என்ன பேசினார் ?

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.  ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலம் நிறைவு பெற்று மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளீர்கள். என்ன நீட் தேர்வுக்கு முயற்சி எடுத்தீர்கள் ? அதுமட்டுமில்லை.

2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும், சொன்னீங்களா ? இல்லையா?  மானம், ரோசம், வெட்கம், சூடு, சொரணை இருந்தால் இதற்கு பதில் சொல்லு உதயநிதி ஸ்டாலின் அவர்களே என கொந்தளித்தார்.