தமிழகத்தில் ஆட்டோ களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறை உத்தரவிட்ட நிலையில் இந்த கட்டணம் நிர்ணயம் செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டர் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக பிரத்தியேக செயலி கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

அதேசமயம் ஆட்டோ நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் சேகரித்து பிரத்தியேக செயலி உருவாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த செயலை தற்போது மொபைல்களில் பயன்படுத்தப்படும் செயலி போல பயன்படுத்தலாம் எனவும் இந்த புதிய செயலி டிசம்பர் மாதம் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் பயணம் செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கட்டணம் மாற்றுவது குறித்து அரசு முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.