செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக, கேப்டன் அவர்களின் சார்பாக, கழகத்தின் சார்பாக அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். இன்றைக்கு தலைவர் அவர்களை சந்திப்பதற்காக இங்கே வந்திருக்கும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தலைமை கழகத்தின் சார்பாக எங்களுடைய நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக டெல்லியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் ( ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான ) கலந்து கொள்ள போகிறார்கள். யார் கலந்து கொள்வார்கள் என்பதை தலைமை கழகம் அறிவிக்கும். அவர்கள் நிச்சயம் டெல்லியில் போய் கலந்து கொள்வார்கள்.நாம் போய் கலந்து கொண்டால் தான் அதில் இருக்கும் நிறை குறைகளை நாம் என்னவென்று தெளிவாக அறிய முடியும்.

அதனால் மத்திய அரசு அழைத்திருக்கும் அந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும். அதேநேரத்தில் அதில் இருக்கும் நிறை, குறைகளை நாங்கள் கண்டறிந்து,  அது உண்மையில் பயனளிக்கக் கூடியதாக இருந்தால் நாங்கள் வரவேற்போம். அது பயனளிக்காது என தெரிந்தால் நிச்சயம் அதை எதிர்ப்போம் என்பதை  நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போ உட்கட்சித் தேர்தல் முடிகின்ற தருவாயில் இருக்கிறது. இன்றைக்கு புதிய வருடம் பிறந்து இருக்கிறது. வெகுவிரைவில் தலைவர் அவர்களால் செயற்குழு – பொதுக்குழு அறிவிக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே செயற்குழு – பொதுக்குழுக்கு பிறகு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து விதமான திட்டங்களையும், செயல்களையும் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம் என தெரிவித்தார்.