புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும்  முக்கிய இடங்களில் குவிந்து புத்தாண்டை வரவேற்றனர். ஆனால்   புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

அந்தவகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 360 பேர் மீது மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபட்டதாக 22 பேரை பிடித்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.