நாட்டின் முக்கிய புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விடுமுறை பயணங்களை ஐ ஆர் சி டி சி ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி காசி மற்றும் அயோத்திக்கான பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் மே 18 அன்று கொச்சுவேலியில் இருந்து புறப்படும். இந்த சுற்றுலா பேக்கேஜிங் கட்டணம் ஒரு நபருக்கு 18060 ஆகும். இருந்தாலும் ஐந்து முதல் 11 வயது வரையிலான பயணிகளுக்கு கட்டணமாக 17,170 மட்டுமே வசூலிக்கப்படும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு http://www.irctctourism.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.