இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்காக மைக்ரோ உணவு பதப்படுத்தும் பிரிவுகளை அமைக்க 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவன திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலமாக தகுதியானவர்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். அரசிடமிருந்து 35 சதவீதம் மானியம் கிடைக்கும். அதாவது 3.15 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி கிடைக்கும். பயனாளிகள் 6.85 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://pmfme.mofpi.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.