தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே விசாரணைக்காக அழைத்து செல்லப்படும் விசாரணைக் கைதிகள் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் லாக்கப்பில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களை தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டார்.
எனவே அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறும் வகையிலும், அஜித் குமாரின் கொலையை கண்டித்தும் வருகிற ஞாயிற்றுக்கிழமை தமிழக வெற்றி கழக கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார்.
லாக்கப்பில் மரணம் அடைந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிட்ட விஜய் அவர்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
