தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தற்போது எதிர்நீச்சல் தொடர் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சென்ற வருடம் தொடங்கிய இந்த சீரியல் தற்போது 300 எபிசோடுகளை எட்டி இருக்கின்றது. பெண்களை முதன்மையாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் தற்போது டாப்பில் இருக்கிறது.

இந்த தொடரில் முக்கியமான வேடத்தில் நடிப்பவர் பிரியதர்ஷினி. சீரியலில் நடிப்பதன் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளம் இவருக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இளம் வயதில் பிரியதர்ஷினி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கின்றது.