தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதுவரை ஒரு போட்டியாளர் மட்டுமே எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றார். சென்ற வாரம் எலிமினேஷன் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடுவர்கள் எலிமினேஷன் இல்லை என கூறி விட்டார்கள்.

மேலும் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். அவர் ஏன் வெளியேறுகிறார் என எந்த காரணத்தையும் கூறவில்லை. நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்துடன் மோதலா? இல்லை வேறு காரணமா? என தெரியாமல் இருக்கின்றது. மேலும் அவர் தனது இணையதள பக்கத்தில் ஷூட்டிங்கில் இருப்பதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். ஒருவேளை அவர் ஷூட்டிங் காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாரா என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.