மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சுவாரியார். இவர் தமிழில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சென்ற ஜனவரி மாதம் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. அதன்படி மஞ்சுவாரியார் துணிவு திரைப்படத்தில் நடிப்பதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.‍