திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி 36 மணி நேரம் பெய்த அதிதீவிர கனமழை காரணமாக மாநகர மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள காடாக மாறியது. அதன் காரணமாக பள்ளி,  கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பல்வேறு இடங்களில் வெள்ளம் போல் மழை நீர் காட்சி அளித்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக  மழை வெள்ள நீர் படிப்படியாக வடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவானது பிறப்பித்துள்ளார். வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும்  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  மழை பாதிப்பு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். முகாம்கள் ஏதும் முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.