தூத்துக்குடி மாவட்டம் கனமழையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படுகிறது.   கொஞ்சம் கொஞ்சமாக மழைநீர் வடிய தொடங்கி இருக்கிறது. மழை நீர் மிகவும் அதிக  அளவில் இருந்ததால் பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு பிறகு,  நான்காவது நாளாக தங்களுடைய இல்லங்களுக்கு மெல்ல மெல்ல செல்ல தொடங்கினார்கள்.

சில பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இன்னமும் இருக்கின்றது. முழுமையாக வெள்ள  நீர்  வடிந்த பகுதிகளில் தற்போது அதிகாரிகள்,  அமைச்சர் பெருமக்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்வதோடு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக அந்தந்த பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் தான் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு சென்னையிலிருந்து அவசரமாக புறப்பட்டு தூத்துக்குடியில் இருந்து அதிகாரிகளுக்கு பல்வேறு  உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் கிடைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த ஆலோசனை அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேரடியாக வருகை தந்தார். அப்போது  அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.  மக்களுடைய குறைகளையும் கேட்டிருந்தார்.

தொடர்ந்து மூன்று நாட்களாக வெள்ளத்திலேயே தத்தளித்ததால் மக்கள் ஆவேசமாக இருந்ததை   உணர்ந்து கொண்ட அமைச்சர்  அவர்களிடம் சமரசமாக பேசி உங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியும்,  மக்களுடைய கோபம் அதிகமாக இருந்ததன் காரணமாக அமைச்சர் அந்த பகுதியில் இருந்து  கிளம்பினார்.