முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீதான வழக்கு பதிவு மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்ததற்கான பின்னணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அதிரடி கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது போடப்பட்டுள்ள வழக்கு பதிவில் எந்தவொரு அரசியல் உள்நோக்கமும் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை என்று திருமாவளவன் ஓப்பனாகக் கூறியுள்ளார். மேலும், சமூகநீதி முற்போக்குக் கூட்டணி உருவாக்கம் என்பது குறித்துத் தாங்கள் இதுவரை எந்தவொரு பேச்சும் நடத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த விஷயத்தில் இடதுசாரிகள் என்ன கருத்து வைத்துள்ளார்களோ அதுவேதான் என்னுடைய கருத்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய விசிக தலைவர், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே, தனிப் பெரும்பான்மை கிடைக்காத தவெக (TVK) அரசுக்குத் தாங்கள் ஆதரவு அளித்தோம் என்ற மிக முக்கிய ரகசியத்தையும் உடைத்துள்ளார்.
இந்த அதிரடி அறிக்கை, தற்போதைய அரசியல் சூழலில் விசிக-வின் அடுத்தக்கட்ட நகர்வையும், புதிய தவெக அரசுக்கான அவர்களின் நிலைப்பாட்டையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளதால் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
