தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாகவே அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் ராஜினாமாக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கட்சியின் மிக முக்கிய பெண் முகமான மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் அவர்களும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அதிரடியாக விலகியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவின் மாநில செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சுமதி வெங்கடேசன், தான் அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாகத் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கட்சியின் மிக முக்கிய மூத்த தலைவர்கள் பலர் அண்ணாமலைக்கு ஆதரவாகவும், கட்சியின் தற்போதைய நிலவரங்களுக்கு எதிராகவும் அடுத்தடுத்து வெளியேறி வரும் வேளையில், இந்த அதிரடி அறிவிப்பு தமிழக பாஜக தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து உதிரும் முக்கிய நிர்வாகிகளால் தமிழக பாஜகவில் பெரும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் அரசியல் திருப்பங்கள் உள்ளதா என்ற பலத்த விவாதங்களும் சோசியல் மீடியாவில் தற்போதைய ஹாட் டாபிக்காக செம வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.
