நாட்டின் தலைநகரான டெல்லியில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வெயில் காலத்தில் தண்ணீர் வரும் வழியிலேயே ஆவியாகிவிடுவதுதான் காரணம் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குபதா அவர்கள் அளித்துள்ள விசித்திரமான விளக்கம் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும், சமூக வலைத்தளங்களில் பயங்கரமான ட்ரோல்களையும் கிளப்பியுள்ளது.

பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ரேகா குப்தா, “டெல்லியில் கடுமையான வெயில் அடிப்பதால், விநியோகிக்கப்படும் குடிநீரில் ஒரு பகுதி வரும் வழியிலேயே ஆவியாகி (Evaporate) விடுகிறது, இதன் காரணமாகவே மக்களுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது” என்று அசாத்தியமான அறிவியல் தத்துவம் ஒன்றை உதிர்த்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் சௌரப் பரத்வாஜ், “அடுத்ததாகத் தண்ணீரை குளிரூட்டி சுருக்கும் (Condensation) திட்டத்தைத்தான் டெல்லி அரசு கொண்டு வர வேண்டும்” என்று கிண்டலடித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக், “மूर्खத்தனத்திற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டாமா?” என்று சாடியுள்ளதோடு, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் போன்றோரும் முதல்வரின் இந்த ‘அறிவியல் கண்டுபிடிப்பை’ மிகக் காரசாரமாகக் கிண்டல் செய்துள்ளனர்.

டெல்லியில் நிலவும் உண்மையான தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு உள்கட்டமைப்பு குறைபாடுகள், கசிவுகள் மற்றும் முறையற்ற விநியோகமே முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் கூறி வரும் வேளையில், டெல்லி முதல்வரின் இந்த “ஆவியாதல் தியரி” தான் தற்போது இணையத்தில் நெட்டிசன்களின் செம ஹாட் ட்ரெண்டிங் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியுள்ளது.