உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான நபர் ஒருவர், தன் உடலில் தீ வைத்துக் கொண்டு நடுரோட்டில் அலறியபடி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் தன் மீதே தீ வைத்துக் கொண்ட அந்த நபர், உடல் முழுதும் தீப்பற்றி எரியும் நிலையிலும் தெருவில் ஓடி வந்துள்ளார். இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரைக் உரைய வைத்துள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறினால் நிலைதடுமாறிய அந்த நபர், ஆத்திர மிகுதியில் வீட்டை விட்டு வெளியேறி தன் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தீ கணம் கணவென உடல் முழுவதும் பரவியதும், வலியால் துடிக்க முடியாமல் கதறியபடி அவர் தெருவின் நடுவே ஓடிவந்துள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் தீயை அணைக்கப் போராடி, பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், உடலின் பெரும்பாலான பகுதிகள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாதாரணமாகத் தொடங்கும் குடும்பப் பிரச்சனைகள் மற்றும் கோப உணர்ச்சிகள் சில சமயங்களில் எத்தகைய கொடூரமான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு கசப்பான சான்றாக மாறியுள்ளது. வீட்டின் முன் தீப்பிழம்பாக ஓடிவந்த நபரின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி, அப்பகுதி முழுவதிலும் பெரும் பரபரப்பையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#बरेली में घरेलू विवाद के बाद मस्जिद के मुअज्जिन अब्दुल ने कथित तौर पर पत्नी से झगड़े के बाद खुद पर आग लगा ली। आग की लपटों में घिरे हुए भागते अब्दुल का वीडियो सोशल मीडिया पर #वायरल हो गया, जिसमें स्थानीय लोग उन्हें बचाने के लिए पीछे-पीछे दौड़ते दिखाई दे रहे हैं। गंभीर रूप से… pic.twitter.com/kK6rNU37V0
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) July 30, 2026
“>
