எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு வெற்றிகாண்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் கொண்டதுதான் முதலமைச்சர் பதவி. நாட்டை வழிநடத்தும் ஒரு தலைவருக்குப் பிரச்சினைகளைக் கையாளுவதற்கான ஆளுமையும், துணிச்சலும் மிக மிக அவசியம்.
நாட்டில் ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை முதலில் தைரியமாக ஒப்புக்கொண்டு, அதைச் சரிசெய்வதற்கான வழிகளைத் தேடுபவரே உண்மையான தலைவராக இருக்க முடியும்.
மாறாக, தன் மீது வரும் விமர்சனங்களைத் தாங்க முடியாமல் அடுத்தவர்கள் மீது பழியைப் போடுவதும், “எல்லாரும் என் மேலதான் பழியைப் போடுறாங்க” என்று புலம்புவதும் ஒரு தலைவருக்கு அழகல்ல.
பிரச்சினைகளை எதிர்கொள்ள பயந்து, மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டு புலம்புபவர்கள் அரசியலுக்கே தகுதியற்ற கோழைகள் ஆவர்.
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்ட துணிச்சல்மிக்க ஆளுமையாகத் திகழ்ந்தார். தன் மீதான விமர்சனங்களை எதிர்கொண்டு, மக்களுக்குத் தேவையானதைச் செய்து காட்டிய தைரியம் அவருக்கு இருந்தது.
எந்தப் பிரச்சினையையும் எதிர்கொண்டு வெற்றிகாணத் தேவையான எல்லா அதிகாரங்களையும் பெற்றதுதான் முதல்வர் பதவி…
பிரச்சினைகளை கையாளும் ஆளுமையும் துணிச்சலும் உள்ளவர்களே பிரச்சினை இருப்பதை முதலில் ஒத்துக்கொள்வார்கள், பின் சரிசெய்வார்கள்…
அடுத்தவர்கள் மேல் பழியை போடுவதோடு, என் மேல… pic.twitter.com/j7x1IEQ1Ls
— ShivaAnand (@DrShivaAnand) July 31, 2026
“>
ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் நடிகர் விஜய், பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் புலம்புவதைப் பார்க்கும்போது, அவர் அரசியலுக்குச் சற்றும் லாயக்கற்ற ஒரு கோழையாகவே தெரிகிறார் என்பதே மக்களின் கருத்து.
