தமிழகத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்பலைகளைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரே விஜய்யின் வருகை வேண்டாம் எனத் தெரிவித்துள்ளதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் கர்நாடகப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நேரடியான மற்றும் மாபெரும் வெற்றி என்று அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
தமிழர் நலனைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கைக்குத் துணை நின்ற அனைத்துக் கட்சிகளுக்கும் மற்றும் தமிழர் நல விரும்பிகளுக்கும் பாமக தலைமை தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி!
முதலமைச்சர் விஜய் கர்நாடாக செல்வது ரத்து ஆகிறது
தமிழ்நாட்டில் உருவான கடுமையான எதிர்ப்பையடுத்து கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமாரே விஜயின் வருகை வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிவித்திருக்கிறார்
இது முழுக்க முழுக்க பாட்டாளி மக்கள் கட்சியால்… pic.twitter.com/S5j6SeWpHY
— thirusangu ramasamy (@r_thirusangu) July 31, 2026
“>
தமிழர் உரிமைக் காவலரான பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் தொண்டர்களாக நிற்பதில் பெருமிதம் கொள்வதாகக் கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
