பிரபல மராத்தி நடிகர் அதுல் குல்கர்னி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், இளைஞர்களைப் போராட்டங்களில் பங்கேற்குமாறு ஊக்குவித்துள்ளார்.

இது குறிப்பாக, எந்தவொரு குறிப்பிட்ட போராட்டத்தின் பெயரையும் குறிப்பிடாமல், அவர் விடுத்துள்ள இந்த அழைப்பு ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என்ற ஊகங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இதனால் தனது பதிவில், முந்தைய தலைமுறைகள் பல தவறுகளைச் செய்து, சவாலான சூழலை இன்றைய இளைஞர்களுக்கு விட்டுச் சென்றுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி, நாட்டிற்குப் புதிய பரிமாணத்தை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.