சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள், சமூகத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்குவதற்காகப் புதியதொரு தனி இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

லதா ரஜினிகாந்த் அவர்கள் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் பொதுமக்களுக்கான ஒரு புதிய இயக்கத்தைத் தற்போது கையில் எடுத்துள்ளார். இதுகுறித்துத் தனது முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், “சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை விரும்புகின்ற அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு தாராளமாகக் கைகோர்க்கலாம்;

நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து, நம் சமுதாயத்திற்குப் பல நல்ல காரியங்களைச் செய்வோம்” என்று பொதுமக்களுக்கு மிக உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார்.

ரஜினி ரசிகர்கள மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளதோடு, சமூக வலைத்தளங்களிலும் தற்போதைய ட்ரெண்டிங் செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.