தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சுப்பிரமணியன் கந்தர்வ கோட்டையில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இவர் கந்தர்வகோட்டை தொகுதிக்கு இன்று வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதற்காக சென்றார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கத்தால் ஒப்பந்தத்தில் விடப்பட்ட புறம்போக்கு நிலத்தில் பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

 

அதற்கு எம்எல்ஏ என்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்று பட்டா வாங்கிக் கொள்ளுங்கள். இந்த நிலப் பிரச்சனையில் என்னிடம் வராதீர்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். நீங்கள் தானே எம்எல்ஏ நீங்கள்தானே எங்களுக்காக வாங்கி கொடுக்க வேண்டும் என மக்கள் கேட்ட போதிலும் அவர் என்னால முடியாது நீங்க கோர்ட்டுக்கு போங்க நான் வரமாட்டேன்னு சொல்லிவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.