ஜெர்மனியைச் சேர்ந்த வேகமாக சாப்பிடும் சாம்பியனான ஆண்ட்ரே ஓர்டோல்ஃப் என்பவர், வெறும் ஒரு நிமிடத்தில் (60 வினாடிகள்) 1,273 கிலோ தேனை சாப்பிட்டு புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் இந்த அசாதாரணமான சாதனை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகக் குறைந்த நேரத்தில் இவ்வளவு பெரிய அளவிலான தேனை அவர் சாப்பிட்டு முடித்தது ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
மிகவும் கடினமான இந்த இலக்கை ஆண்ட்ரே ஓர்டோல்ஃப் அசால்ட்டாக செய்து முடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவரது இந்த அசாத்திய வேகத்தைக் கண்டு வாயடைத்துப் போயுள்ளனர். அதிவேகமாக உணவுகளை உட்கொள்வதில் ஏற்கனவே பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ள ஆண்ட்ரேவின் இந்த புதிய வினோத சாதனைப் பட்டியல், தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாகவும், ட்ரெண்டிங்காகவும் மாறியுள்ளது.
