எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “நண்பகல் 12 மணி வரை அவர் மீது கைது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது” என வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும், நீதிமன்ற கெடுவையும் மீறி நீலாங்கரை இல்லத்தில் வச்சு அவர் காவல துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலின் மீது மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த முழுமையான வழக்கு விவரங்கள் (FIR copy) நீதிமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
வழக்கு ஆவணங்கள் சரியாகச் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அவர்கள் தற்காலிகமாக இந்த விசாரணையை ஒத்திவைத்துவிட்டு, பட்டியலிலுள்ள மற்ற வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளார். பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது, உதயநிதியின் ஜாமீன் மற்றும் கைது நடவடிக்கை குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
