எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரைக் குறித்துத் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய அந்த பேச்சில் ஒரே ஒரு வார்த்தையாவது ஏற்புடையதாக இருக்கிறதா? என்பதை திமுகவினர் முதலில் தங்கள் வீடுகளில் உள்ளவர்களிடம் போட்டுக்காட்டிப் பார்க்க வேண்டும். இவ்வளவு கீழ்த்தரமாக, கேவலமாகப் பேசுவதற்கு உதயநிதிக்கு என்ன அவசியம் இருக்கிறது?” என்று மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், “பொதுவெளியில் இப்படி அநாகரீகமாகப் பேசுபவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மட்டுமல்ல, ஒரு எம்.எல்.ஏ-வாக நிற்கக் கூட தகுதியில்லாதவர்” என்று உதயநிதி ஸ்டாலினைக் கடுமையாகச் சாடினார். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தவெக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ள இந்த அதிரடிக் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
