அமெரிக்காவின் பிரபல பாப் இசை நட்சத்திரமான டெய்லர் ஸ்விஃப்ட் அமர்ந்திருந்த நாற்காலி ஒன்றை வாங்குவதற்கு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ‘என்.பி.ஏ’ கிழக்கத்திய மாநாட்டு இறுதிப் போட்டிக்கு , தனது கணவரும் அமெரிக்க கால்பந்து நட்சத்திரமுமான டிராவிஸ் கெல்ஸியுடன் டெய்லர் ஸ்விஃப்ட் நேரில் வந்திருந்தார். மைதானத்தின் முன்பகுதியில் உள்ள வி.ஐ.பி இருக்கையில் அமர்ந்து அவர் போட்டியை ரசித்துப் பார்த்தார். தற்போது, டெய்லர் ஸ்விஃப்ட் அமர்ந்திருந்த அந்த நாற்காலி பொது ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வெறும் 100 டாலர் (சுமார் ரூ. 8,300) என்ற ஆரம்ப விலையுடன் தொடங்கப்பட்ட இந்த ஏலம், டெய்லர் ஸ்விஃப்ட்டின் அசாத்தியப் புகழின் காரணமாக தற்போது 6,000 டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 5 லட்சம்) உயர்ந்து, ஏல சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு மைதானத்தின் சாதாரண இருக்கை ஒன்று, பிரபல பாப் நட்சத்திரம் அமர்ந்தார் என்ற ஒரே காரணத்திற்காக லட்சக்கணக்கில் ஏலம் போவது ஒட்டுமொத்த விளையாட்டு மற்றும் இசை உலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
