சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஒரே நேரத்தில் வருகை தந்துள்ளனர். திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அழகிரி, பல வருடங்களுக்குப்பிறகு தம்பி ஸ்டாலினை சந்தித்தார். தயாளு அம்மாவின் 90வது பிறந்தநாள் விழாவில், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். இது, அழகிரி மீண்டும் அரசியலில் நுழைவதற்கான முதல்படியாக அமைந்துள்ளது