திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான மகளிருக்கு உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முத்தால் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தற்போது அறிவித்தது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த்து வருகிறார்கள்.

அந்தவகையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 உரிமைத் தொகை வழங்குவோம் எனசொல்லி ஆட்சியில் அமர்ந்த திமுக, இன்றைக்கு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் தான் ≈1000 கிடைக்கும் என அந்தர்பல்டி அடித்துவிட்டார்கள் என்று சசிகலா விமர்சனம் செய்துள்ளார். மக்களை ஏமாற்றும் முயற்சிகளை கைவிட்டு விட்டு தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல், குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ச1000 வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.