தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துக் கோன் பிறந்தநாள் விழாவானது வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் வருகிற வீரன் அழகுமுத்துக் கோன் 313-வது பிறந்தநாள் விழாவானது 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கோவில்பட்டி கோட்டத்தில் பாண்டவர் மங்களம், மந்திதோப்பு ரோடு, சிவஞானபுரம், தளவாய்புரம், செட்டிக்குறிச்சி, அய்யனாரூத்து, கயத்தார், கோவில்பட்டி, குளத்தூர், விளாத்திகுளம், புதூர்பாண்டியாபுரம், ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 32 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் வருகிற 11ஆம் தேதி மட்டும் மூடப்படுகின்றன. மீறி விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.