சமூக வலைதளங்களில் தினமும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது அக்கா மற்றும் தம்பியின் அன்பான பிணைப்பைக் காட்டும் அழகான வீடியோ ஒன்று இணையவாசிகளின் மனதைக் கவர்ந்து வருகிறது.

அந்தச் சிறுமி தனது குட்டித் தம்பிக்கு மிகவும் பிரபலமான ‘ஜானி ஜானி எஸ் பாப்பா’ என்ற குழந்தைகள் பாடலைச் செல்லமாகச் சொல்லிக் கொடுக்கும் காட்சிதான் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், அந்தச் சிறுமி ஒரு பெரிய ஆசிரியரைப் போல மிகவும் பொறுமையாகவும் அன்பாகவும் பாடலின் ஒவ்வொரு வரியையும் உச்சரித்துத் தன் தம்பிக்குக் கற்றுத் தருகிறார்.

“>

அதற்கு அந்தச் சிறிய தம்பியும் தன் மழலை மொழியில் தத்தித் தத்திப் பதிலளிக்க முயலும் காட்சி காண்போரின் மனதை நெகிழ வைக்கிறது. “ஈட்டிங் சுகர்?” மற்றும் “ஓபன் யுவர் மவுத்… ஹா ஹா ஹா!” போன்ற வரிகளைச் சொல்லும்போது இருவரின் முகத்திலும் வெளிப்படும் அமிழ்தினும் இனிய சிரிப்பும் உற்சாகமும், சகோதரத்துவத்தின் ஆழமான அன்பைப் பிரதிபலிக்கிறது.

இணையவாசிகளின் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு லைக்குகளைக் குவித்து வருகிறது. அக்கா தன் தம்பியைப் பொறுமையாகவும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்ளும் விதத்தைப் பார்த்து, நெட்டிசன்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைக் கருத்துப் பிரிவில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இத்தகைய மழலைகளின் தூய்மையான அன்பு மற்றும் குறும்புத்தனங்கள் நிறைந்த வீடியோக்கள், நம் சிறுவயது நினைவுகளையும் குடும்ப உறவுகளின் இனிமையையும் மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன.