கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து  கடந்த மாதம் இறுதியில் இருந்து காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

இந்நிலையில் தக்காளி விலை சாமானிய மக்களை பெரிதும் பாதித்து வரும் சூழலில், பழங்களின் விலையும் கடந்த 2 வாரத்தை விட தற்போது ஒவ்வொரு பழங்களின் விலையும் ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.200 முதல் ரூ.220 வரையும், அதேபோல் மாம்பழங்களில் ஒட்டுரகம் ரூ.50-க்கும், பங்கனப்பள்ளி ரூ.70-க்கும், ஆரஞ்சு ரூ.120 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.