ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் இதன்மூலமாக வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே இது அனைவரிடமும் இருக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில் ரேஷன் அட்டை தொலைந்து விட்டால் உடனே https://www.tnpds.gov.in/ -இல் பதிவு செய்யவும். அதில் ஓபன் ஆகும் லிங்கில் IDஐ உள்ளீடு செய்தால், மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை ஸ்கிரீனில் பதிவு செய்து சுயவிவர பக்கத்திற்கு நுழைந்தால் TNPDS பக்கத்தை காண்பீர்கள். இதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து, அந்த காப்பியை டவுன்லோட் செய்து உணவு வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்தால், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.