இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சமந்தா இளமை குறையாமல் சருமத்தையும் உடலையும் பாதுகாக்கிறார். சமந்தாவிற்கு இயல்பாகவே சருமம் பளபளப்பாக இருக்கும். சரும பராமரிப்பை மேம்படுத்த யோகா செய்வது, தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்ளவும் சமந்தா தவறுவதில்லை. காலையில் வெறும் வயிற்றில் கோலஜன் நிறைந்த பானத்தை குடிப்பதால் சரும பராமரிப்பு மேம்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.