தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த வருடம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார்.

அப்போது அவர் சமூக இழிவுகளை மீறும் அதிகாரம் பெற்ற பெண்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு ஆக்கபூர்வமான தேர்வு என்று கூறினார். அதோடு இப்படிப்பட்ட படங்களில் நடிப்பது அவர்களின் குரல்களின் பிரதிபலிப்பாகவும், அவர்களுக்கான குரலாகவும் இருக்கும் என்றும், இப்படிப்பட்ட படங்களில் நடிப்பது என்னுடைய கடமை என்றும் அவர் கூறினார். மேலும் நடிகை நயன்தாரா தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.