தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சமந்தா நேற்று தனது 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஒரு படத்திற்கு மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 110 கோடி என கூறப்படுகிறது.