+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகள் பெறலாம் என பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பள்ளி கல்வித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.