பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இருமுறை கால அவகாசம் கொடுத்தும் அதற்கு அவர் உரிய பதிலளிக்காததால் கட்சியிலிருந்து அவரை நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அதாவது அன்புமணி அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்காததால் அந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக்கொண்டதாக கருதப்படுகிறது.

எனவே பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாகவும் இந்த முடிவு சற்று வருத்தமாக இருந்தாலும் கட்சி நலனுக்காக இதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ராமதாஸ் கூறினார். மேலும் அன்புமணிக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் அவரைக் கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.